"தனக்கு இவர்தான் வாழ்க்கைத்துணையாக வருவார்" என்பது ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருக்குமா? குறிப்பாக, பெயர் சொல்லி இருக்குமா ?
கட்டாயமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏழாவது காண்டம் என்பது சரியான திருமண காலம் என்ற விஷயத்தைப் பற்றிப் பேசுவதாகும். சிலருக்கு 35 - 40 வயது வரை கூடத் திருமணம் ஆகாமல் இருக்கும். "ஏன் திருமணம் ஆகவில்லை?" என்ற காரணமும் இதில் இருக்கும். திருமணத்திற்கான அமைப்பு இருக்கிறதா என்றும் சொல்லப்பட்டிருக்கும்.
வாழ்க்கைத்துணை யார், எந்தத் திசையிலிருந்து வருவார், என்ன படித்திருப்பார், எவ்வளவு தூரத்திலிருந்து வருவார் போன்ற விவரங்கள் இருக்கும். அதுமட்டுமில்லாமல், அவர்களுடைய வீடு இருக்கக்கூடிய அடையாளங்கள்—அது மாடி வீடா அல்லது கீழ் தளத்தில் இருப்பார்களா, பக்கத்தில் என்னென்ன அடையாளங்கள் (கோயில் இருக்கிறதா, நீர்நிலைகள் இருக்கின்றனவா) இருக்கின்றன, அவர்களுடைய தெரு வீதி எந்தத் திசையை நோக்கி இருக்கும், அவங்க வீட்டு வாசல் எந்தத் திசையை நோக்கி அமைந்திருக்கும் என்பது வரை இருக்கும்.
அந்தக் குடும்பம் எப்படிப்பட்டதாக இருக்கும், பெற்றோர் இருப்பார்களா இருக்க மாட்டார்களா, உங்களுக்கு வாழ்க்கைத்துணையாக வருபவர் அந்தக் குடும்பத்தில் எத்தனாவது குழந்தையாகப் பிறந்தவர், வேலைக்குச் செல்வாரா அல்லது வீட்டில் இருப்பாரா போன்ற விவரங்கள் வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுடைய அங்க அடையாளங்கள்: முக அமைப்பு எப்படி இருக்கும், தோற்றம், அங்க லட்சணங்கள், எந்த இடத்தில் மச்சம் இருக்கும், பற்களின் வரிசை எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் மிக விரிவாக அதில் இருக்கும்.
அவர்களுடைய உடல் ஆரோக்கிய நிலை பற்றியும் வரும். பெயர் அடையாளங்கள் கூட இன்றைக்கு இருக்கும் காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லப்பட்டிருக்கும். நேரடியாகப் பெயரைச் சொல்லாமல், "ஒரு புதுமையான மலரொத்த தேவி நாமம்" என்றோ அல்லது "செல்வத்தைக் குறிக்கக்கூடிய சொல்" என்றோ அந்தப் பெயரினுடைய பொருள் விளங்கும் படி கொடுத்திருப்பார்கள். அந்தப் பெயர் எந்த எழுத்தில் ஆரம்பிக்கும், எந்த கிரக அமைப்புகள் அவங்களுக்குப் பொருந்தும், எந்தெந்த ராசி, நட்சத்திரங்கள் இவங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற விவரங்களும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதெல்லாம் படிப்பதற்கும், கேட்பதற்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், நேராக அந்த ஊருக்குச் சென்று நாம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதான். அந்த அளவிற்குத் துல்லியமான விவரங்கள் அதில் இருக்கும்.
'குழப்பமான மனநிலையில்' இருப்பவர்கள் நாடி ஜோதிடத்தைப் பார்க்கலாமா?
நிச்சயமாகப் பார்க்கலாம், உங்களுக்கான நல்லதொரு துணையை நாம் அமைத்துக் கொடுத்துவிடலாம். "தான் காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா?" என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. எத்தனை காதல் கைகூடியிருக்கிறது? அப்படி கைகூடிய திருமண வாழ்க்கை எத்தனை பேருக்கு நல்லபடியாக நிலைத்து நிற்கிறது ? காதலித்து, போராடி, எல்லாரையும் பகைத்துக்கொண்டு திருமணம் செய்து, வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். தோல்விகளைச் சந்திக்காமல் இருக்க 'திருமண காண்டம்' (ஏழாம் காண்டம்) ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் பிரிந்துவிடுகிறார்களே ? அதற்கான தீர்வு நாடி ஜோதிடத்தில் இருக்குமா ?
ஜாதகம் என்பது, அந்த நேரத்தைச் சாதகப்படுத்திக் கொள்வதாகும். ஒரு மனிதன் 100 பேரைச் சந்தித்தால், அதில் 2 பேரிடம் மட்டும் மிகவும் இணக்கமாக, அன்பாகச் சிரித்துப் பேசிவிட்டு வந்திருப்பான். அந்த இடத்தில் ஒரு சிறிய பிணைப்பு (Bond) உருவாகும்.
அப்படி ஒரு சூழ்நிலை வரும்பொழுது அந்த இரண்டு ஆன்மாக்களும் இணைகின்றன. அப்படி இணைவது, அவர்கள் முந்தைய ஜென்மத்தில் ஏதோ ஒரு உறவில் இருந்திருக்கிறார்கள் என்று பொருள்.
ஜாதக ரீதியாகத் திருமணம் செய்தாலும், அவர்களுடைய கர்ம பலன் இருக்கிறது. "இன்னாரு தான் இணைய வேண்டும்" என்பது ஏற்கனவே எழுதப்பட்டது. அதன்படி சேரும் பொழுது வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் செல்லும்.
காதலிருந்து பிரிந்து விட்டு, இன்னொரு உறவில் நன்றாக வாழ்கிறார்கள். காதல் கர்ம வினையினால் ஏற்படுகிறதா ?
இது முழுக்க கர்ம வினை தான், அவர்கள் செய்த பாவத்தின் பலன் தான். நம்முடைய கர்மாவுக்கு ஏற்ப அமையக்கூடிய கிரக நிலைகளில் 3-வது இடம், 4-வது இடம், 7-வது இடம் என்று பிரிக்கப்படுகின்றன. 7-வது இடம் என்பதை 'களத்திர ஸ்தானம்' (திருமண வாழ்க்கை) என்று சொல்கிறோம். அது களங்கமில்லாமல் இருக்க வேண்டும்.
7-வது இடத்தில் ராகு, கேது, சுக்கிரன், சூரியன், சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை இருக்கும் பொழுது, அவர்களுடைய குணாதிசயங்களும் (Character) சற்றே மாறுபடும். அந்தந்தக் கிரகங்களுடைய தசா காலங்கள் வரும்பொழுது, அவர்களுடைய குணங்கள் அதற்குத் தகுந்தாற்போல் மாறும். அப்பொழுது ஒரு தவறான உறவை ஏற்படுத்திக் கொடுத்து விடும். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் கூட, திருமணமே ஆகாத ஒரு நபருடன் தொடர்பு வைத்து வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றன.
இவையெல்லாம் கர்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள். அவர்களுக்கான சரியான ஓலையை எடுத்துப் பார்க்கும் போதுதான், எதனால் இப்படி நடக்கிறது, போன ஜென்மத்தில் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், ஏன் இந்த ஜென்மத்தில் இப்படிப்பட்ட உறவுகள் அவர்களுக்கு உருவாகின்றன என்பதெல்லாம் மிக விரிவாகத் தெரியவரும்.
கர்மாவினால் என்றால், அவர்கள் முற்பிறவியில் எந்த மாதிரியான பாவங்களைச் செய்திருப்பார்கள் ?
அதை அவர்களுக்கான ஓலையை எடுத்துப் பார்க்கும் போது தான் துல்லியமாகச் சொல்ல முடியும். பொதுவாகச் சிலருக்கு எப்படி இருக்கும் என்றால்: போன ஜென்மத்தில் ஒருவரைக் காதலித்து, "உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று வாக்குக் கொடுத்து, திருமணத்திற்கு முன்பே அவருடன் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு, பிறகு அந்த வாழ்க்கையில் சேர முடியாமல் ஏமாற்றிப் பிரிந்திருப்பார்கள்.
ஏமாற்றப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாகச் சாபம் கொடுப்பார்கள். அந்தச் சாபம் இந்த ஜென்மத்தில் தொடரும். இவர்களும் இந்த ஜென்மத்தில் யாரிடமாவது சென்று ஏமாந்து, அந்த வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்க நேரிடும். போன ஜென்மத்தில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டத்தைக் கொடுத்தார்களோ, அதே கஷ்டத்தை இவர்கள் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கக் கூடிய நிலை வரும். இதெல்லாம் அவர்களுடைய ஓலையைப் பார்க்கும் போது மிக விரிவாக வெளிப்படும்.
ஒருதலைக் காதலர்களுக்கு இதில் ஒரு தீர்வு கிடைக்குமா?
இந்த ஜென்மத்தில் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்ற விதிப்பலன் இருக்கும் பொழுது, அதே விதிப்பலன் இவர்கள் நேசிக்கிறவர்களுக்கும் இருக்கும் பட்சத்தில், கட்டாயமாக வாழ்க்கை கூடிவந்துவிடும். அதற்கான கிரக அமைப்புகளும் ஒன்றாகப் பொருந்தி வரக்கூடிய நிலையில்தான் அது நடக்கும்.
ஆசை வருவதற்குக் கூட நம்ம கர்மா தான் காரணமா?
ஆமாம். கர்மா என்பது 5 விதமாகப் பிரிக்கப்படுகிறது. "நான் இந்த ஜென்மத்தில் எந்தத் தப்புமே செய்யவில்லை, நான் நல்லபடியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று சிலர் கூறுவார்கள். ஆனால், ஆசை என்பதே ஒரு பாவம்தான். ஆசை உருவாக கர்மா தான். காமம், பசி என்பதும் கர்மா. ஒரு மனிதனுக்குள் எப்பொழுது ஆசை உருவாகிறதோ, அப்பொழுதே அவன் பாவம் செய்யத் தொடங்கிவிடுகிறான். அதனால் "எனக்குக் கர்மா இல்லை" என்று யாரும் சொல்ல முடியாது. மனிதனாகப் பிறப்பதே பாவப்பட்ட ஜென்மம் தான்.
ஒரு தம்பதி நல்ல உறவில் இருந்தால், முன்ஜென்மத்தில் என்ன மாதிரியான புண்ணியங்களைச் செய்திருப்பார்கள்? அப்படி அமையாமல் தவறியவர்கள், இந்த ஜென்மத்தில் எதையெல்லாம் பின்பற்றினால் அவர்களுடைய உறவு நன்றாக இருக்கும் என்று சொல்வீர்களா?
சிலரிடம் நான், "இது ஒரு தெய்வீகக் காதல்" என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், கர்மாவினுடைய அடிப்படையில் தான் கிரகங்கள் அமைகின்றன. அவர்களுக்கு 5-ம் இடம் என்பது காதலைக் குறிக்கும். 7-ம் இடம் என்பது திருமணத்தைக் குறிக்கும். 9-ம் இடம் என்பது பாக்கியத்தைக் குறிக்கும். இந்த மூன்று இடங்களோடும் கலந்திருக்கக்கூடிய கிரக நிலையின் வழியாக வரக்கூடிய வாழ்க்கைத்துணை, அவர்களுடைய வாழ்க்கை ஒரு சாதாரண கணவன்-மனைவி மாதிரி இருக்காது, நண்பர்களைப் போல இருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் கூட, "பாருங்களேன், அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்!" என்று வியந்து பேசுவார்கள்.
அதற்கு அவர்கள் செய்த புண்ணியமே காரணம். "இவள்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும்" என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. 7-வது காண்டத்தை எடுத்தால், அவளுடைய பெயர், அங்க அடையாளங்கள், குணாதிசயங்கள் என எல்லாமே வரும் பொழுது, அந்தத் தெய்வீகக் காதல், தெய்வீக உறவு என்பது பிணைக்கப்படுகிறது.
திருமணம் ஆனவர்களுக்கு இந்த மாமியார் அல்லது பெண்ணின் தாயால் அல்லது Boy Bestie, Girl Bestie வருவதால் பிரச்சினை வருகிறது. இவர்கள் நம் வாழ்க்கையில் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதா ?
எழுதப்பட்டதுதான். ஏனென்றால், முன் ஜென்மத்தின் கர்மாவானது இந்த ஜென்மத்தில் கிரக நிலைகளை அமைத்துக் கொடுக்கிறது. திருமணம் ஆகி 2 அல்லது 7 வருடங்கள் கழித்து சில நட்புகள் உருவாகும். இதெல்லாம் வாழ்க்கையினுடைய 'பொதுக் காண்டம்' பார்க்கும் பொழுதே வந்துவிடும்
பொதுக் காண்டம் என்பது நாடி பார்க்கக்கூடிய வயதிலிருந்து, நம் வாழ்நாளை முடிக்கும் காலம் வரை நம்முடைய வாழ்வாதாரம் பற்றி சொல்வதுதான். நல்ல விஷயங்களோடு சேர்த்து இந்த இடைப்பட்ட காலத்துத் தீய விஷயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைத் தெரிந்துகொண்டு, "இந்த வயதில் இது போன்றதொரு பிரச்சினை வரும் என்று மகரிஷி நமக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கிறார், அதனால் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது" என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்காகத்தான் நாடி ஜோதிடத்தை எல்லாரும் பார்க்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். "இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழப் போகிறோம்" என்று, முன்கூட்டியே வரப்போகும் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, அதற்கு இடம் தராத வகையில் வாழ வேண்டும் என்றுதான் மகரிஷிகளும் ஆசைப்படுகிறார்கள். நாங்களும் விரும்புவது அதைத்தான்.
"இவரை திருமணம் செய்து கொண்டால் உங்களுடைய ஆயுள் குறைந்துவிடும்" என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே ?
அதாவது, "இன்னாரும் இன்னாரும்தான் திருமணம் செய்ய வேண்டும்" என்ற விதி இருக்கிறது. அதில், ஒரு ஆணுக்கு 77 வயது வரை ஆயுள் காலம் இருக்கிறது என்று சொல்லப்பட்டால், அவனுக்கு மனைவியாக வருபவர்களுக்கு அதுபோன்ற ஒரு கிரக அமைப்பை சேர்க்கும் பொழுது, அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாகச் செல்லும். ஜாதகத்தைத் தாண்டி, இடையில் கர்ம பலன், எல்லா மனிதர்களுக்குமே ஒரு 'கண்டத்தை' (விபத்து அல்லது ஆபத்தை) கொடுக்கும். இப்பொழுது என்னுடைய ஆயுள் 80 வயது என்று எழுதப்பட்டிருந்தால், அந்த 80 வயது வரை நான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல.
என்னுடைய 47 வயதில் கிரகங்கள் சரியில்லை என்றாலோ அல்லது நம்முடைய கர்ம வினையால் உடல் சார்ந்த பிரச்சினையோ, வாகன விபத்து போன்ற பிரச்சினைகளோ வரவிருக்கிறது என்று மகரிஷி எழுதியிருந்தால், அதை நாம் தவிர்க்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் மகரிஷிகள் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான தீர்வுகளைச் சரியான முறையில் எடுத்து, அதற்குரிய வழிபாடுகளைச் செய்துகொண்டால், அந்தத் தற்காலிகக் கண்டங்களை நாம் தவிர்க்கலாம் என்கிற விதி இருக்கிறது. அதை நாம் நல்லபடியாகப் பயன்படுத்திக்கொண்டு, இருவரும் நீண்ட காலம் வாழலாம். அதைத் தான் நாம் சொல்ல வருகிறோம்.
கண்டம் என்பது எல்லாருக்குமே உண்டு. எல்லா ராசி, எல்லா லக்னத்தில் பிறப்பவர்களுக்கும் இடையில் விபத்து என்பது நேரலாம். அந்த விபத்து வருவதற்கான காரணங்களையும் மகரிஷி சொல்கிறார், அதைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் பரிகார முறைகளையும் அவரே சொல்லியிருக்கும் போது, நாம் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் மகரிஷியினுடைய ஆசை.
ஒரு காதல் முறிவு (Breakup) ஏற்படுவது, திருமணத்தில் விவாகரத்து வருவதற்குமே கர்ம வினைதான் காரணம் என்றால், அதற்கு பரிகாரம் இருக்கிறதா ?
கட்டாயமாகப் பரிகாரம் உண்டு. ஏனென்றால் மகரிஷி, "இந்தக் கர்மாவினால் இவர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்திக்கப் போகிறார்கள். இந்தப் பிரச்சினைக்காகத்தான் இவர்கள் ஓலைச்சுவடியைப் பார்க்க வரப் போகிறார்கள்" என்பதைக் கூட எழுதியிருப்பார். ஒருத்தர் இங்கு வருவதற்கு ஏதேனும் ஒரு தூண்டுகோல் இருக்கும். "இந்தத் தவறான உறவுகளைப் பிரிக்க வேண்டும் அல்லது என்னைப் பிரிந்து சென்றவரைச் சேர்க்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா, இதிலிருந்து நான் வெளியில் வருவதற்கு என்ன வழி?" என்ற தேடலோடு நாடி ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலர் உண்டு.
அதைத் தீர்ப்பதற்கான தீர்வு இருப்பதால்தான் அந்த இடத்திற்கு வந்து, ஓலையை எடுத்து, படித்துப் பயன் பெற முடிகிறது என்பதையும் மகரிஷி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
எல்லா உறவுச் சிக்கல்களை நாடி ஜோதிடத்தில் தீர்க்கலாமா ?அதற்கென்று பரிகாரங்கள் இருக்குமா அல்லது எல்லாருக்குமே பொதுவாக இருக்குமா?
நாடி ஜோதிடத்தினால் மட்டும்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். வேறு எந்த ஜோதிடத்தினாலும் இதற்கு முழுமையான தீர்வு கிடையாது.
எல்லாருக்குமே பொதுவான பரிகாரம் கிடையாது. "அவனவன் செய்த வினைக்கு ஏற்ப பிரச்சினையை அனுபவிக்கிறான்." எல்லாருடைய கர்மாவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவரவர்களுடைய தனிப்பட்ட கர்மாவிற்கு ஏற்பத் தான் பிரச்சினையை அனுபவிக்கிறார்கள். அந்தப் பிரச்சினையிலிருந்து அவர்கள் முழுமையாக வெளியில் வருவதற்கான தீர்வை, கட்டாயமாக நாடி ஜோதிடத்தினால் மட்டும்தான் கொடுக்க முடியும்.

ॐ