எட்டுக்கை அம்மன் கோவில்.
இங்கு "மதிமயங்கி", "மதிகலக்கி" என்று சொல்லப்படும் மூலிகை உள்ளது. நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு தருகிறேன் என்று ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு காரியத்தை முடித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு அதை முடித்துக் கொடுக்காமல் காலத்தைக் கடத்துவார்கள். அப்படிப்பட்ட நபர்களின் மனதை மாற்றுவதற்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கியமான மூலிகை.
கொல்லிமலை என்பது நிறைய சித்தர்கள் வாழக்கூடிய இடம். பல கோயில்களுக்கு பிரசித்தி பெற்ற இடம். இங்கு நிறைய மூலிகைகள் உள்ளன. "சிவன் வணங்கி" என்ற மூலிகை. இது "ஆள் மடக்கி" என்று சொல்லப்படும் வேர் இங்கு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் பல பிரச்சனைகள், புரிதல் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சில மைகள் கொடுப்பார்கள். அந்த மையில் இத்தகைய மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்த முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தும்போது அவர்களுக்குள் நல்ல பரஸ்பர ஒற்றுமை உருவாகும். இது காலம் காலமாக ஐதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
தேவதாரம் மூலிகை. இது ஒரு மரம். இதில் எண்ணெய் போன்ற ஈரப்பதமும் இருக்கும். இதை நெருப்பில் லேசாகக் காட்டினாலே தீப்பிடித்துவிடும். அப்போது இதற்குள் உள்ள எண்ணெய் கீழே இறங்கும். அதைத்தான் தேவதார எண்ணெய் என்று கூறுகிறார்கள். கீழே ஒரு தட்டு வைத்தால் அந்த எண்ணெய் அதில் இறங்கும். இதை தொழில் விருத்திக்காக மையில் கலந்து மற்றும் வசியத்துக்கு பயன்படும்.
பல மர்மங்களும், சூட்சுமங்களும் கொல்லிமலைக்குள் அடங்கியுள்ளன.
இந்த திரிசூலத்தில் நிறைய புகைப்படங்கள் குத்தி வைக்கப்பட்ட காரணம் என்ன?
யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டவர்கள், பழிவாங்க முடியாத நிலையில், அவர்களுடைய உருவப் படங்களை எடுத்துக்கொண்டு வந்து, தாங்கள் நினைக்கும் கோரிக்கையை ஒரு தகட்டில் எழுதி, அதை சுவாமியின் பாதத்தில் வைத்து, அந்தப் படங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அந்தப் படத்தை திரிசூலத்தில் சொருகி, அதன் மேல் எலுமிச்சம்பழம் வைக்கிறார்கள். அது ஒரு பலிக்குச் சமம்.
மிருகங்களைப் பலி கொடுக்க முடியாதவர்கள் எலுமிச்ச பழத்தைப் பலியாகக் கொடுக்கிறார்கள். ஒரு ஆட்டைப் பலி கொடுக்க முடியாதவர்களுக்கு எலுமிச்சம்பழம் பலியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய் ஒரு மனிதனைப் பலி கொடுப்பதற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. மாந்திரீக மற்றும் அதர்வண வேத முறைகளில் இதுபோன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இது உக்கிரமான, மயானம் சார்ந்த காளி என்பதால், தெய்வத்திடம் முறையிடும்போது ஏதாவது ஒரு பலியைக் கொடுக்க வேண்டும்.
இங்கு சைவமாகவும் அசைவமாகவும் படையல் கொடுக்கப்படுகிறதா?
கோழி, ஆடு, பன்றி போன்ற உயிரினங்களைப் பலி கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்க முடியாதவர்கள் பூசணிக்காய், ஊமத்தங்காய், எலுமிச்சம்பழம் போன்றவை பலி கொடுக்கிறார்கள். சிலர் அறியாமையால் கோழியையே உயிருடன் செலுத்துவதும் உண்டு.
மேலே என்ன அம்மன் இருக்கிறார்?
இங்கு இருக்கிறவர்களின் அனுமதியைப் பெற்றுத்தான் மேலே செல்ல முடியும். கொல்லிமலை என்றாலே அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியண்ணன் கோவிலுக்கு நிகரான ஒரு தலமாக எட்டுக்கை அம்மன் கோவில் கருதப்படுகிறது.
இந்த அம்மனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
நேற்று இந்த இடத்தில் சக்கரங்கள் வரைந்திருந்தோம். சில தோஷங்களை நீக்குவதற்காக சில பூஜைகள் செய்யப்படுகின்றன. இன்று பலி கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று அம்பாள் முன்பாக ஹோமமும் செய்தோம். இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்றால், அம்பாளின் சொரூபமே அஷ்டபுஜமாகும். அதாவது எட்டு கைகள் கொண்ட வடிவம். அம்பாளின் தலையில் மண்டையோடு இருக்கும். ஒரு கையில் கிண்ணம், மற்ற கைகளில் ஆயுதங்களும் இருக்கும்.
சிலர் மற்றவர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான பூஜைகள் செய்கிறார்கள். அதற்குப் பலிகளும் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கும், அந்தப் பிரச்சனைகள் நீங்குவதற்கும் இந்த அம்பாள் உதவுவார்.
அம்பாளின் பெயரைச் சொல்ல முடியுமா?
இந்த அம்மனை சிலர் வனபத்ரகாளி, மயான வனக்காளி என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் இந்த இடத்தைச் சுற்றி சுடுகாடுகள் உள்ளன. அம்பாள் மண்டையோட்டு மாலையை அணிந்திருப்பதால், மயான பூஜைகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கு இந்த அம்பாள் அனுக்கிரகம் கொடுக்கக்கூடியவர். நாடிகளிலும் ஓலைச்சுவடிகளிலும் இதற்கான பதிவுகள் வந்ததால்தான் நாம் இந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
இந்த கொல்லிப்பாவை தெய்வத்திற்கு எந்த நாட்கள் விசேஷமானவை?
தெய்வங்களுக்கு எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். அதை நாம் தீர்மானிக்க முடியாது. இங்கு மலையைச் சார்ந்து வாழும் மக்கள் சித்திரை பௌர்ணமி விசேஷமான நாள். அன்றைய தினம் கூட்டம் இருக்கும். இந்த ஊரையும், அம்பாளையும் சார்ந்த இருக்கக்கூடியவர்கள் படையல் செய்வார்கள். சுற்றுவட்டாரத்தில் விளையும் காய்கறிகள், நெல், மிளகு, ஏலக்காய் போன்றவற்றைக் கொண்டு பொங்கல் செய்து சைவப் படையலாக செய்வார்கள். அந்த ஒரு நாள் மட்டும் மாமிசம் இடம்பெறாது.
இங்கு அமாவாசை நாளிலும் கட்டுக்கடங்காத கூட்டமாக இருக்கும். உள்ளூர் மக்களை விட வெளியூரிலிருந்து மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஜோதிடர்கள் சொல்லி வரக்கூடியவர்கள் உண்டு. பௌர்ணமி நாட்களிலும் கூட்டம் இருக்கும். விசேஷ பூஜைகள் நடக்கும்.
இந்தக் கோவிலில் என்ன மாதிரியான வேண்டுதல் வைக்கிறார்கள்?
மனிதனால் எளிதாகத் தீர்க்க முடியாத கடன், வழக்கு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செய்வினை, கண் திருஷ்டி போன்றவை தீர்வு கொடுத்து இந்த அம்பாள் வழி நடத்துகிறார்.
இங்கு நிறைய பூட்டுகள், தாயத்துகள், சிவப்பு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. பாறைகளில் சாவிகளும் மாட்டப்பட்டுள்ளன. அவை என்ன மாதிரியான வேண்டுதல் ?
பரிகாரத் தலங்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் இடம் கிடையாது. இந்த இடம் செய்வினை, சூனியம், கண் திருஷ்டி, சில நேரடி எதிரிகளை நாம் அறிந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் நமக்குத் தெரியாத ஒரு எதிரி நமக்குள்ளேயே இருப்பார். அவர் எப்போதும் நம்மைச் சுற்றிக்கொண்டே இருப்பார், நம்முடன் நன்றாகப் உறவாடுவார், நாம் சொல்வதையெல்லாம் கேட்பார், எல்லாவற்றிற்கும் தலையாட்டுவார், சிரித்துப் பேசுவார். ஆனால் அவரது உள் மனதில் என்ன செய்யும்? 'இவன் வீடு, கார் வாங்கிட்டான், இவனிடம் நிறைய பணம் இருக்கிறது' என்று இருக்கும். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கக்கூடிய இடம் இது.
ஒரு பூட்டு ஒரு விஷயத்தை முடக்கி வைக்கும். சாவி அதைத் திறப்பதற்கான மூலப்பொருளாக இருக்கிறது. இங்கு ஒருவரைப் பழிவாங்க வேண்டும், மேலே வரக்கூடாது என்ற வக்கிரமான புத்தியுடன் செயல்படுபவர்கள், தகட்டில் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுதிச் சாமியிடம் கோரிக்கையாக வைத்து, பூட்டையும் எந்திரத்தையும் சேர்த்துச் சூலத்தில் கட்டி, சாவியைக் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தூக்கி எறிந்து விடுகின்றனர். சாவி கிடைத்தால் தானே அந்தப் பூட்டைத் திறக்க முடியும்? பூட்டு திறக்கப்பட்டுவிட்டால் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்; பலிக்காமல் கூடப் போகலாம். இதனால் அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
என்னுடைய அனுபவத்தில், ஒருவரை அழிக்க அல்லது பழிவாங்க நோக்கத்துடன் செய்யப்படும் விஷயங்களுக்கு இந்த அம்பாள் துணை நிற்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தெய்வமாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் "கொல்லிமலைக்கு சென்றால் ஒருவரை அழித்துவிடலாம்" என்ற மூடநம்பிக்கையுடன் இருப்பார்கள். இங்கு வந்தால் பெரிய பிரச்சனைகளுக்கு, சாவிகள், தீர்வுகள் என்பது இங்கிருக்கும் அம்பாள் தான்.

ॐ