நீங்கள் இந்த துறையில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் வந்தது என்பதை பற்றி கூற முடியுமா?
கடந்த 25 ஆண்டுகளாக சென்னை அரும்பாக்கத்தில் நாடி ஜோதிட சேவையை செய்து வருகிறோம். நம் முன்னோர்கள், மனிதர்கள் எந்த மாதிரியான துறையில் இருப்பார்கள் என்பதை முற்காலத்திலே பிரித்துள்ளார்கள். நாங்கள் 'வள்ளுவர்' குலத்தை சேர்ந்தவர்கள். வள்ளுவர்களுக்கான அடையாளமாக இருப்பது ஜோதிட கலை. இதன் அடிப்படையில்தான் நான் இத்தொழிலில் இருக்கிறேன். இது என்னுடைய மரபணுவிலேயே (Gene) உள்ளது. என்னுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என முன்னோர்கள் அனைவரும் தலைமுறையாக இச்சேவையை செய்து வந்துள்ளனர்.
நாடி ஜோதிடம் என்னும் விஷயத்தை எவ்வாறு கொண்டு வந்தீர்கள்?
நாடி ஜோதிடம் என்பதை நான் புதிதாக கொண்டுவரவில்லை. எல்லாமே எங்களுடைய முன்னோர்கள் எங்களுக்காக அமைத்து கொடுத்ததாகும். அவர்களின் பாரம்பரியத்தில் நாங்களும் பயணிக்கிறோம். பொதுவாக ஜோதிடத்தை பற்றி பேசும்போது, "வள்ளுவன் சொல் மாணிக்கக் கல்" என்ற பழமொழி கூறுவார்கள். வள்ளுவர்கள் என்றாலே ஜோதிடத்திற்கு உரியவர்கள் என்பது இறைவனின் படைப்புகளில் ஒன்றாகும்.
சாதாரண ஜோதிடத்திற்கும், நாடி ஜோதிடத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்பது, நாடி ஜோதிடம் சித்தர்களால் நமக்கு அருளப்பட்டது. சித்தர்கள் என்றால் அகஸ்தியர், பிருகு, சிவவாக்கியர், வசிஷ்டர் போன்ற பல சித்தர்களும், ரிஷிகளும் இதில் பல விபரங்களை கூறியுள்ளனர். அவர்கள் ஜோதிடத்தை மட்டும் கூறவில்லை. மருத்துவத்தை, ஆன்மீகத்தை பற்றியும் பேசியுள்ளனர்.
எங்களுடைய வள்ளுவர் குலத்திற்கு ஜோதிடம் மட்டுமல்லாமல் மருத்துவமும் உரியதாகும். கிராமங்களில் ஏதேனும் உடல்நல பாதிப்பு அல்லது நோய்கள் ஏற்பட்டால், உடனடித் தீர்விற்காக எங்களிடம் தான் வருவார்கள். எனவே, நாங்கள் மருத்துவமும் செய்து வருகிறோம். தற்போது ஜோதிடம் மிகவும் பிரபலமாக உள்ளதால், எல்லாரும் அதை மட்டுமே முதன்மையாக கருதி, வள்ளுவர்கள் என்றால் ஜோதிடம் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி மருத்துவமும் உள்ளது.
நாடி ஜோதிடத்தை சித்தர்கள் எதன் அடிப்படையில் கொடுத்துள்ளார்கள் ?
வாழ்க்கையின் தத்துவம் மற்றும் வாழ்க்கையை பற்றிய ரகசியம் என்பது பெருவிரல் ரேகையில் அடங்கியுள்ளது. ஏனெனில் ரேகைதான் நாடி ஜோதிடத்தின் சிறப்பம்சம். இந்த ரேகைக்கும், நம்முடைய ஆன்மாவிற்கும் (Soul) மற்றும் நம்முடைய முந்தைய பிறவிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் செல்ல வேண்டுமானால், பூட்டைத் திறப்பதற்கான திறவுகோல் (Key) தேவை. அந்த திறவுகோல் தான் நம்முடைய பெருவிரல் ரேகையாகும். ரேகைகள் பல விதமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒரே ரேகைக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
உதாரணமாக, 'வட்ட ரேகை' என்று எடுத்துக்கொண்டால், வட்ட அமைப்பிலே பல பிரிவுகள் வருகின்றன. தனவட்ட ரேகை, தனவட்ட மேரு ரேகை, பிறைவட்ட ரேகை என பல அடையாளங்கள் வருகின்றன. அதில் மூன்று புள்ளிகள், நான்கு புள்ளிகள் அமையும். ஒவ்வொன்றும் மனிதனின் கர்மாவை பற்றி பேசுபவை. ஒவ்வொரு புள்ளியும் கைரேகையின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருக்கும்.
ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையையும் பார்ப்பதன் காரணம் என்ன?
ஆண்களுக்கு வலது கை ரேகையை வைத்துத் தேடும் பொழுதுதான், அவர்களுக்கான பலன்கள் ஓலையில் சரியாக அமையும். பெண்களின் வலது கை ரேகையை வைத்து ஓலையை தேடினால் கிடைக்காது. அதற்கான ஓலைச்சுவடியின் கட்டுகளே அமையாது. இதெல்லாம் மகரிஷிகளின் சூட்சும ரகசியங்கள்.
நீங்கள் சந்தித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான நிகழ்வுகள் என்னென்ன ? ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை எப்படி எதிர்கொள்வீர்கள் ?
என்னுடைய பயணத்தில் வருத்தமான விஷயங்கள் நிறைய நடந்துள்ளன. ஒருமுறை வெளிமாநிலத்தில் இருந்து ஒருவர் நம்மை பார்க்க வந்திருந்தார். அவருடைய நாடியை எடுத்து படித்து வாழ்க்கை முறைகளை கூறினோம். அவர் ஒரு பெண்ணை நேசிப்பதாகவும், அவரை எப்பொழுது திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற கேள்வியுடன் வந்திருந்தார்.
ஆனால், அவருடைய ஓலையை படித்து பார்த்த பொழுது, அப்போது இருந்த காலகட்டம் அவருக்கு சாதகமாக இல்லை. குறிப்பிட்ட 8 மாத காலத்தை கடந்தால் தான் வாழ்க்கை அமையும் என்றும் ஓலையில் கூறப்பட்டது. அவர் விபரங்களை தெரிந்துகொண்டு சந்தோஷமாக ஊருக்கு புறப்பட்டார். அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணும் அவருடன் வந்திருந்தார்.
அவர் மகிழ்ச்சியாகச் சென்றாலும், மகரிஷி 'எட்டு மாதம் நேரம் சரியில்லை' என்று கூறியிருந்ததால் அவருக்குள் ஒரு அச்சம் இருந்தது. ஒருநாள் அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா பயணமாக சென்றிருந்தார். அப்போது அந்த பெண் எனக்கு தொலைபேசியில் அழைத்து, அவர் வெளியில் செல்வதை கூறினார். பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் நேசித்த ஆணிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் என்னால் அதை உடனே எடுக்க முடியவில்லை. நான் திரும்ப அழைத்த பொழுது, அவர் உயிரோடு இல்லை. நண்பர்களுடன் பயணித்த இடத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். அது என் மனதை மிகவும் பாதித்தது. ஒருவேளை நான் அந்த அழைப்பை எடுத்து பேசியிருந்தால், அவர் என்ன சொல்ல வந்திருப்பாரோ அல்லது நாம் பேசி அந்த நேரத்தை திசை திருப்பியிருக்கலாமோ என்று பலவாறாக யோசித்து வருந்திய சம்பவங்கள் உண்டு. அதே போன்று, பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளன.
ஒருவரின் தொழிலில் மிகப்பெரிய இழப்பு வரப்போகிறது போன்ற எச்சரிக்கை தெரியவந்தால், அதை நீங்கள் கூறும்போது மக்கள் கோபமடைவார்களே ? "நல்ல விஷயத்தைக் கேட்க வந்தால் அபசகுனமாக சொல்கிறீர்களே" என்று பேசும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?
நான் வெறும் ஒரு கருவி மட்டுமே. நான் கடவுள் கிடையாது. மகரிஷிகள் உங்களின் தலையெழுத்தில் என்ன எழுதியிருக்கிறார்களோ, அதை படித்து சொல்வதற்கான பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்.
ஜோதிடத்தை நம்பி அதிலிருந்து வளர்ச்சி அடைந்தவர்களும் இருப்பார்கள். நம்பாமல் வீழ்ச்சியடைந்தவர்களும் இருப்பார்கள். அப்படி யாரையாவது குறிப்பிட முடியுமா ?
நாம் ஒரு பிரச்சனையில் இருக்கும் பொழுது, 'இந்தக் கோயிலுக்குச் சென்றால் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையுடன் சென்று பலன் அடைபவர்களும் இருக்கிறார்கள். 'சொல்லியிருக்கிறார்களே' என்று சும்மா சென்று வருபவர்களும் இருக்கிறார்கள். இதில் கடவுள் யாருக்கு அருள் செய்வார் என்ற விஷயம் இருக்கிறது. முதலில், நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை என்பது மிக முக்கியம். நாம் ஒரு விஷயத்தை ஆத்மார்த்தமாக, உள்ளுணர்ந்து செயல்படும் பொழுதுதான் அதற்கான பலன் இருக்கும். சந்தேகத்துடனும், இருமனதோடும் ஒரு விஷயத்தைச் செய்யும் பொழுது கண்டிப்பாக பலன் மாறுபடும்.
பரிகாரங்களை செய்து வளர்ச்சி அடைந்தவர்களின் மாற்றங்களை விவரிக்க முடியுமா?
பலர் இருக்கிறார்கள். பெயர் குறிப்பிடாமல் ஒரு சிறிய உதாரணத்தை கூறுகிறேன். ஒருவர், முக்கியமான துறையில் இருப்பவரின் வழிகாட்டுதலின்படி வந்தார். வந்தவுடன் அவருடைய ஓலையை எடுத்து பார்த்துவிட்டு, "இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்" என்று அனுப்பி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் தொலைபேசியில் அழைத்த பொழுது எங்களால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. உடனே அவர் நம் அலுவலகத்தில் இருக்கும் 70 வயது முதியவரிடம் தொலைபேசியில் பேசி, "எனக்கு இன்றே நாடி பார்த்தாக வேண்டும்" என்று மிரட்டலாக பேசினார்.
அவர் என்னிடம் வந்து, "அவர் கடினமாகப் பேசுகிறார்" என்று கூறினார். சரி, "அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்" என்று கூறிவிட்டேன். ஆனால், அவர் நேரடியாக அலுவலகத்திற்கே வந்துவிட்டார். நான் உள்ளே வேறொரு வேலை செய்துகொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கழித்து அவரை உள்ளே வரச் சொன்னேன். உள்ளே வந்தவுடன் அவர் நேராக என் காலில் விழுந்துவிட்டார். எவ்வளவு கோபமாகப் பேசினாரோ, அதற்கு முற்றிலும் மாறாக, "என் வாழ்க்கையே உங்கள் கையில்தான் இருக்கிறது" என்றார்.
பொதுவாக ஓலையை எடுத்து, அதை நோட்டுப் புத்தகத்தில் முழுமையாக எழுதி, அதன் பிறகு படித்து விளக்கம் கொடுப்பதுதான் முறை. ஆனால், நான் உடனே அந்த ஓலையை நேரடியாக பார்த்து படிக்க ஆரம்பித்தேன். அவர் தன் திருமண வாழ்க்கையை பற்றி கேட்பதற்காக வந்திருந்தார். அவர் ஒரு பெண்ணை விரும்பியிருந்தார். ஆனால் அந்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணமாகிவிட்டது. இருப்பினும், மகரிஷி "அவர்தான் மீண்டும் உன் வாழ்க்கையில் துணையாக வருவார்" என்று ஓலையில் குறிப்பிட்டிருந்தார். அது பிற்காலத்தில் அவர் வாழ்க்கையில் அப்படியே நடந்துவிட்டது. இன்று அவர் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
"எனக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை, தெரிந்தவர்கள் சொன்னதால் பார்க்க வந்தேன்" என்று வந்தவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாறிய சம்பவங்களும் உண்டா ?
"எனக்கு இதில் நம்பிக்கை இல்லை" என்று கூறும்போது, 'நம்பிக்கை இல்லாதபோது ஏன் வருகிறாய், அந்த நேரத்தை நம்பும் வேறொருவருக்கு பயன்படுத்தியிருக்கலாமே' என்று என் மனதிற்குள் தோன்றும். ஆனால், மற்றொருபுறம் 'உனக்கு நம்பிக்கை இல்லையா, யாருக்கும் தெரியாத உன்னுடைய ரகசியத்தை நான் ஓலை மூலம் வெளிப்படுத்துகிறேன் பார்' என்று படித்து காட்டுவேன். அதைப் பார்த்து மிரண்டு போனவர்கள் பலர் இருக்கிறார்கள். "இத்தனை வருடங்களாக யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இவர்தான் சொன்னார்" என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.
இறப்பிற்கான எச்சரிக்கைகளும் ஓலையில் வரும்பொழுது, அதை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?
ஒரு மனிதனுக்கு அதிகபட்சமாக பயம் வருவது மரணம் மட்டும்தான். மரணத்தை பற்றி இதுவரை நான் யாருக்கும் நேரடியாக சொன்னதில்லை. ஏனெனில், அதை சொல்வதற்கான அதிகாரம் எனக்கு இல்லை. மகரிஷிகள் ஓலையில் குறிப்பிட்டிருந்தாலும், அதை மக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியாது. அதே நேரத்தில், சொல்லாமல் மறைக்கவும் முடியாது. எனவே, அதை சூசகமாக, "இந்த வயதில், இக்காலகட்டம் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் யாரையும் நம்பாதீர்கள். பயணங்கள், உணவுமுறை போன்றவற்றில் எச்சரிக்கையாக இருங்கள். உடலில் சிறிய வலி ஏற்பட்டாலும் கைவைத்தியம் பார்க்காமல், உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள்" என்று எச்சரிப்புவோம். அப்படி எச்சரிக்கையாக இருந்து, பல ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சில ஜோதிடர்கள், பரிகாரங்களே கிடையாது என்றும், கர்மவினையை அனுபவித்தால் தான் வாழ்க்கை மாறும் என்றும் கூறுகிறார்களே? பரிகாரம் செய்வதன் மூலம் கர்மாவை கழிக்க முடியுமா?
பரிகாரங்கள் என்பதே கோயில் வழிபாடுகள் தான். பூர்வ ஜென்ம கர்மாவை எப்படி கழிப்பது என்பதற்கான வழிதான் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடத்தின் மூலாதாரமே கர்மாவில்தான் தொடங்குகிறது. "நீ என்ன கர்மவினை செய்தாயோ, அதைத்தான் இன்று அனுபவிக்கிறாய். நெல் விதைத்தால் நெல்தான் அறுவடை செய்ய முடியும், வேறொன்றையும் அறுவடை செய்ய முடியாது".
அகஸ்தியரின் வாக்குப்படி, "தர்மம் தலைகாக்கும்" என்பதற்கேற்ப, பரிகாரமே தர்மம் செய்வதுதான். தர்மத்தையும் சரியான முறையில் செய்ய வேண்டும். சிலர் "காலையிலிருந்து சாப்பிடவில்லை, உணவு வாங்கித் தாருங்கள்" என்பார்கள். அதை வாங்கிக்கொண்டு, பின்புறமாக சென்று அந்த உணவகத்திலே கொடுத்து பணம் வாங்குவார்கள். சாப்பாடு கொடுத்தால், "எனக்கு பணம் கொடுங்கள்" என்று கேட்பார்கள். அந்த பணத்தை மாலையில் தவறான வழியில் (மது அருந்துதல் போன்றவற்றுக்கு) பயன்படுத்துவார்கள். நாம் தர்மம் செய்துவிட்டதாக நினைப்போம், ஆனால் நாம் செய்த உதவி அவர் நல்லபடியாக பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு புண்ணியமாக மாறும். அதை அவர் தவறாக பயன்படுத்தினால் நமக்கே கர்மாவாக வந்து சேரும்.
அடுத்தபடியாக இறைவழிபாடு. ஒவ்வொரு கர்மாவும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தை சார்ந்து இருக்கிறது. அந்த கிரகத்திற்கு அதிதேவதையான தெய்வங்களை வணங்கும் பொழுது, அந்த கிரகத்தின் வீரியம் குறைகிறது. நம்முடைய முந்தைய பிறவியின் கர்மாவினுடைய தாக்கங்கள் குறைகின்றன. அதன் மூலம் நமக்கு வரும் துன்பங்களின் அளவை குறைத்து கொள்ளலாமே தவிர, எதையுமே முழுமையாக நிறுத்திவிட முடியாது.
பரிகாரம் என்பது 100% தீர்வு கிடையாது. அப்படி என்றால், யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஒரு ஆபத்தை தடுப்பதற்கும் அல்லது வீரியத்தை குறைப்பதற்கும் மட்டும்தான் பரிகாரமே தவிர, எதையுமே முற்றிலும் தடுப்பது கிடையாது.
உங்களிடம் மொத்தம் எத்தனை ஓலைச்சுவடிகள் இருக்கின்றன? பொதுவாக கைரேகை வைத்துவிட்டு சென்ற பிறகு, "இப்போதைக்கு ஓலைச்சுவடி இல்லை, இரண்டு மூன்று நாட்கள் ஆகும்" என்று கூறுவார்களே ?
ஒரு ஓலைச்சுவடிக் கட்டில் குறைந்தது 50 ஓலைகள் இருக்கும். என்னிடம் குறைந்தபட்சம் 11,920 கட்டுகள் இருக்கின்றன. அந்த கட்டுகளில் எத்தனை ஓலைகள் இருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு கட்டில், ஒருவருக்கு பொருந்தக்கூடிய ஓலை என்பது ஒன்று அல்லது இரண்டு மட்டும்தான்.
உங்களிடம் வருபவர்களுக்கு ஓலை கிடைக்க குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் ஆகும் ?
ஆரம்பக் காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில்தான் நாடி ஜோதிடத்திற்கு மூலாதாரமாக இருந்தது. எங்களுடைய ஆசிரமமும் வைத்தீஸ்வரன் கோயிலில் தான். அங்கிருந்து நாங்கள் தற்போது இங்கு வந்து சேவையை செய்கிறோம். யாரிடமும் ஓலைகள் நிரந்தரமாக இருக்காது. என்னிடம் இருக்கும் 11,000 சொச்சம் கட்டுகளும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு, வேறு கட்டுகள் அங்கிருந்து இங்கு கொண்டு வரப்படும்.
எந்த வயதில் உங்களுடைய பலனை தெரிந்துகொள்ள வேண்டும், யார் உங்களுடைய ஓலையை படிக்க வேண்டும் என்ற பிராப்தம் இருக்கிறதோ, அந்த இடத்திற்கு நீங்கள் தேடி வருவீர்கள். எல்லோருக்கும் நாடி ஜோதிடம் சொல்லிவிட முடியாது. நான் உங்களுக்கு நாடி ஜோதிடம் படிக்கிறேன் என்றால், நீங்கள் என் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிராப்தம் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தை நோக்கி வருவீர்கள்.
முன்பெல்லாம் சென்னையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதும் பயணத்திலேயே சென்றுவிடும். அவ்வளவு தூரம் சென்றாலும் அங்கே நமக்கான ஓலை இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியாது. அது வேறெங்காவது இருக்கலாம். அப்பொழுது ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறுவோம். ஆனால், இப்போது ஓலை இல்லை என்றாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் அந்த ஓலை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுவோம். அதைக் கொண்டு, ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் அந்த ரேகைக்குரிய ஓலைச்சுவடியை வரவழைத்து விபரங்களை படித்துக் கொடுத்துவிடுவோம்.

ॐ