Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

ஜோதிடர் சொன்ன வார்த்தை - அறிகுறி காட்டிய சாமி

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நடிகர் பொன்னம்பலம் ஒரு பேட்டியில் 'என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சொந்தக்காரர் தான் சாப்பாட்டில் (Slow Poison) விஷம் வைத்துவிட்டார். அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். ஆனால், மாந்திரீக மூலமாக சூனியம் வைத்துவிட்டார்கள். அதனால் எழுந்து நிற்க முடியாமல், சக்கர நாற்காலி தான் கதி என்று ஆகிவிட்டது' என பேசியிருந்தார். இதுவும் கர்மாவில் தான் இருக்கிறதா? இது நாடியில் எழுதப்பட்டிருக்கிறதா?
நல்ல கேள்வி. நீளமான கேள்வியாக இருந்தாலும், மக்களுக்கான விழிப்புணர்வு வரும்படி கேட்டிருக்கிறீர்கள்.

சூனியம் என்பது நம்முடைய எதிரியினுடைய பார்வைதான். அது நம் சொந்த உறவாக அல்லது மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கலாம். சூனியம் என்பதை மூன்றாவது மனிதன், முகம் தெரியாதவர் செய்ய மாட்டார். நம் கூடவே இருக்கிறவர் தான் செய்வார்.

நம்முடைய வளர்ச்சியைக் கண்டு முதன்முதலில் பொறாமைப்படக்கூடியவர்கள், நம்மோடு கூடவே இருக்கும் சொந்த உறவாக அல்லது நட்பாக இருக்கும். யாரை நாம் 'நகமும் சதையும்' போல நினைக்கிறோமோ, 'ரொம்ப நெருங்கிய உறவு' என்று நம்புகிறோமோ... அவர்களால் வரக்கூடியதுதான் உண்மையான சூனியம். அவர்களே நமக்கு பெரிய சூனியமாக மாறி விடுகிறார்கள்.

அவர்களால் நாம் ஒரு நல்ல பொருளை வாங்க முடியாது. அவர்களின் மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் ஆடம்பரமாக வெளியே வர முடியாது. பொறாமையும் போட்டி நிலை எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் அவர்கள் 'சூனியம்' செய்யக்கூடிய நிலைக்கு மாறுகிறார்கள்.

"கல்லடி பட்டுத் தப்பினாலும் கண்ணடி பட்டுத் தப்ப முடியாது"

ஒரு மனிதனுடைய கொடிய பார்வையிலிருந்து (கண் திருஷ்டி) உங்களால் ஒருபோதும் நகர முடியாது. அதுதான் முதலாவது அடி. உண்மையான சூனியம் என்பது அதன்பின் தான் வரும்.

முதன்முதலில் நம்மை அழிக்கக்கூடியது கண் தான். அந்த பார்வைக்கு ஆற்றல் உண்டு. நாம் வெளியே செல்வோம், வருவோம். நமக்கு ஆகாதவர்கள், 'அவன் போகிறான் பார்... நன்றாக இருப்பானா அவன்?' என்று நினைத்தால், நம்மை உடனடியாக தாக்கும். நாம் செல்லும் காரியம் வெற்றி பெறாது. இதனை உணர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நம்மைப் பற்றி முழுமையாக தெரிந்து, (A to Z) விபரங்களையும் அறிந்துகொண்டு, 'நாம் இந்த நேரத்தில் எங்கே இருப்போம் ? என்ன செய்வோம்? நம்முடைய மன ஓட்டம் என்ன நினைக்கிறது?' என்பதை நம் கூடவே உறவாடுபவர்களால் மட்டும்தான் நமக்கு சூனியமே செய்ய முடியும். ஏனென்றால், அவர்களுக்கு தான் நம்முடைய ரகசியங்களும் தெரியும். நாம் எந்தக் கோவிலுக்குப் போகிறோம், எந்தத் தெய்வத்தை நம்புகிறோம், எந்த மாதிரியான பொருள்களை வாங்குகிறோம், என்ன மாதிரியான உணவை விரும்பி சாப்பிடுகிறோம் என்று நம்முடைய ஒவ்வொரு அசைவையும் முழுமையாக புரிந்துகொண்டவர்களால்தான் நமக்கு சூனியம் செய்ய முடியும்.
பூ விழுகிறது
இன்று பலருடைய வாழ்க்கை பாதிக்கப்படுவது, கேள்விக்குறியானதற்கும் இதுதான் காரணம்.

நாம் ஒவ்வொரு காணொளியிலும் பேசும்போது பின்னால் 'பூ விழுகிறது' என்கிறோம். ஆனால், இந்தப் பூ நாம் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் விழுந்திருக்கலாம். ஆனால், உண்மையான விஷயத்தை பேசும்போது மட்டும் விழுவதென்றால், அந்த உண்மையை நம் குருநாதர் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் கூடவே இருப்பதனால் நம்முடைய நேர காலம், ராசி, நட்சத்திரம், லக்னம் என்பது அவர்களுக்கு தெரியும். எளிதாக ஒருவரை அழிக்க வேண்டுமென்றால், அவருடைய சரியில்லாத பலவீனமான நேரத்தை பார்த்து செய்வினை வேலையை முடித்து விடுவார்கள். மற்றபடி ஏதோ ஒரு பொம்மை செய்வது, அதில் தகடு எழுதி வைப்பது, முட்டையை வைத்துப் பில்லி சூனியம் செய்வதெல்லாம்.....இல்லை

"மந்திரம் கால், மதி முக்கால்."

சில விஷயங்களில் 'மதி' தான், புத்திதான் வேலை செய்யும். அது எல்லாருக்கும் பொருந்தாது (Work out ஆகாது). உங்களுடைய நேரம் சரியில்லை என்றால், உங்களை எப்படி வேண்டுமானாலும் வைத்து அடிக்கலாம். நான் இதை பலமுறை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில், ஐயா நடிகர் பொன்னம்பலம் அவர்களின் நேர காலமும், கிரக நிலைகளும் அந்த சமயத்தில் மிக மோசமாக இருந்திருக்கும். அவர்கள் உயிருக்கு உயிராக நம்பிய, தன் கூடவே இருந்த மனிதரால் தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நம்பிக்கையானவர்களிடம் தான் வாங்கி சாப்பிட்டு இருப்பார்.

எல்லாத்துக்கும் முதல் படி என்பது ஆசை, பொறாமை, வளர்ச்சி. இதுதான் ஒரு மனிதனை அழிப்பதற்கான மூலக் காரணமாக இருக்கிறது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.