Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நாடி ஜோதிடம்

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
வெளிநாட்டில் இருப்வர்கள் எப்படி நாடி ஜோதிடம் பார்ப்பது?
நான் வெளிநாட்டில், இந்தியாவில் இருப்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. இங்கு வாழக்கூடிய மக்களுக்கு 5,000 ரூபாய் என்பது பெரிய பணம். வெளிநாட்டிற்கு பிழைக்க போன நம் ஆட்களுக்கு அங்கு குடியுரிமை கிடைத்திருக்காது. அவர்கள் குடும்பத்தை பிரிந்து, வாடகை கொடுத்து, பல தேவைகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். அதனால்தான் வெளிநாட்டில் இருப்பவர்களிடம் அதிக பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிடையாது. எல்லாரையும் சமமாக பார்க்கிறோம்.

நேரடியாக வர முடியாதவர்கள் கைரேகையை அனுப்ப வேண்டும். இதற்காக முத்திரை மை (Stamp Pad) அல்லது வீட்டில் இருக்கும் பெண்களிடம் உதட்டுச்சாயம் (Lipstick) வாங்கி, ஆண்கள் வலது கைரேகை, பெண்கள் இடது கைரேகை முழுமையாக பூசி, ஒரு வெள்ளைத்தாளில், அதிக அழுத்தம் (Pressure) கொடுக்காமல், மென்மையாக வைத்தால் ரேகை நன்றாக பதியும். அலைபேசி மூலம் நிழற்படம் (Photo) எடுத்து எங்களுக்கு WhatsApp செய்தால், உங்களுக்குரிய ஓலை இருக்கிறதா என்பதை பார்த்து சொல்லுவோம்.

Skype, Zoom, Google Meet போன்ற வசதிகள் உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் Botim, Telegram போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். நேரடியாக வந்து அமர்ந்தால் என்ன சேவையோ, அதே தரமான சேவையை இணையம் வழியாகவும் வழங்குவோம்.

இணையம் வழி 'நம்பகத்தன்மை இருக்குமா?'
எங்களுக்கு மனசாட்சி இருக்கிறது. என்னால் முடிந்தவரை தர்மத்தை மீறுவதில்லை. சில நேரங்களில் ரேகை அனுப்பி இரண்டு வாரம் தாமதமாகலாம். அதற்காக வருத்தப்படலாமே தவிர, ஒருமுறை உங்களுக்கு சேவையை நான் வழங்க ஆரம்பித்துவிட்டால், அதிகபட்ச துல்லிய பலன் சொல்வேன். அதைச் சற்றும் குறைக்க மாட்டேன். இதற்கு நான் நேர்மையாக வாக்குறுதி அளிக்கிறேன்.

ஊரை விட்டு, நாட்டை விட்டு, தனிமையில் கஷ்டப்படுவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் எங்களை அழைக்கலாம், அதை உணர்ந்து நான் பணியாற்றுகிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரே குறை தாமதம். நானே ஓலைகளை தேடி, பேசி தொண்டை வறண்டு போகிறது. இரவு 1 மணி வரை வேலை பார்த்துவிட்டு, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுகிறேன். முடிந்தவரை என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். பலன் சொன்னதில் திருப்தி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நான் வாசிப்பது மகரிஷியின் 'வேத வாக்கு'.

நான் நாடி ஜோதிடத்தில் புகழ்ச்சியாகப் பேச மாட்டேன். உண்மையை அப்படியே பேசிவிடுவேன். வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்ததுதான். துன்பக் காலத்தில் பாவங்களை குறைப்பதற்கான வழிகளை செய்ய வேண்டும்.

உதாரணமாக, ஒருவருக்குக் காதல் தோல்வி வரப்போகிறது என்றால், முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவீர்களா ?
சிலரது கர்மவினைப்படி திருமணம் அமையாத சூழல் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லிவிடுவேன்.

இன்றைய காலத்தில் 90% மக்கள் திருமண தடையை சந்திக்கிறார்களே?
விதிப்படி திருமணம் நடக்க அமைப்பு இருந்து, ஏதோ ஒரு காரணத்தால் தடைப்பட்டால் அதற்கு நிச்சயம் மகரிஷி மூலம் தீர்வு உண்டு. திருமணத்தை தீர்மானிப்பது இறைவன். அதைத் தடுக்க நமக்கு அதிகாரம் இல்லை.

ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார், ஆனால் வீண் செலவுகள் இருந்தால் அதற்கான காரணம் என்ன? அதை எப்படி தடுப்பது?
விரயம் என்பது ஒரு நோய் போன்றது. ஒரு மருத்துவரிடம் சென்று நோய் குணமாகவில்லை என்றால் அடுத்தது எந்த காரணத்தினால் நோய் உருவானது என்ற ஆழமான சிகிச்சைக்கு செல்வோம். இன்றைய கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ற இதரப் பரிசோதனைகளை செய்வோம். அதேபோல, அவர்களுடைய ஜாதகக் கட்டங்களுக்குள் சென்று, ஏன் நடக்கிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அதிலிருந்து வெளியே வருவதற்கு தீர்வு சொல்லிவிடுவோம். பணம் வீட்டில் தங்குவதற்கும், சேமிப்பதற்கும் உண்டான வழிமுறைகளை கொடுத்துவிடுவோம்.

ஊடகங்களில் பலர் ஜாதகம், நாடி பார்க்கிறார்கள். உங்களுடைய அனுபவத்தில், போலி ஆட்கள் என்பதை மக்கள் எப்படி அடையாளம் காண்பது ?
நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். ஒரு சிலர் கர்மாப்படி ஏமாற வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னிடம் வருபவர்கள் யாரும் புதிய வாடிக்கையாளர்கள் கிடையாது. எல்லாருமே ஒரு இடத்தில் பார்த்து அனுபவப்பட்டு, பல ஆயிரங்களை இழந்து வந்தவர்கள் தான். எனக்கு 80% வாடிக்கையாளர்கள், ‘இவரிடம் போனால் நன்றாக இருக்கும்’ என்று மற்றவர்கள் சொன்ன நன்மதிப்பு (Review) மற்றும் கருத்தை (Opinion) வைத்தே வருகிறார்கள்.

புதிதாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் வருபவர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையாக தேடி வருபவர்களுக்கு முழுமையாக என்னை அர்ப்பணிக்கிறேன்.

எல்லாரும் ஜோதிடர் ஆகிவிட முடியாது. ஜோதிடன் ஆவதற்கு ‘மாணாக்கன் விதி’ என்று ஒன்று இருக்கிறது. புத்தகத்தை படித்து அல்லது ஜோதிடப் பயிற்சிக்கு சென்று, ஜோதிடம் சொன்னால் பலிக்காது. கலைமகள் அனுக்கிரகமும், மகரிஷி உங்கள் நாவில் அமர்ந்து சொல்லும் அருளும் இருக்க வேண்டும். அப்படி உள்ளவர்களிடம் தான் வாக்கு பலிதம் இருக்குமே தவிர, எல்லாரும் சொன்னால் ஜோதிடம் பலிக்காது.

நிறைய போலி ஜோதிடர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் பிரம்மாண்டம் கிடையாது, எதார்த்தம் தான் உண்டு. உண்மையை மட்டும் பேசுகிறோம். நான் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது 3 அல்லது 6 மாதங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்தே தெரிந்துவிடும்.

பெரியவர்கள் சொல்வார்கள், ‘சொத்துகளை இழந்துவிட்டோம், ஆனால் போனதை நினைத்து வருத்தப்படாதே, கர்மா வேறொரு ரூபத்தில் வர வேண்டிய கஷ்டத்தை இப்படி எடுத்துக்கொண்டது’ என்று. இது உண்மையா?
உண்மைதான். சிலருக்குச் சில நேரத்தில் இழப்பு வர வேண்டும் என்பது விதி. அவர்கள் செய்த புண்ணியத்தினால் கடவுள் அவர்களுக்கு அருள் புரிகிறார். உயிருக்கு இழப்பு வராமல் பணத்திற்கு இழப்பு வருகிறது. சொத்தைத் திருப்பி சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. ஆனால் உயிர் போனால் வராது, உடல் ஊனமானால் பழைய நிலை திரும்பாது. இறைவன் உயிரை எடுக்காமல், யாரிடமாவது ஏமாறுவது போன்ற வீண் விரயங்களை ஏற்படுத்துவார். அது அந்த நேரத்தில் வலிக்கும், ஆனால் காலப்போக்கில் அதை இறைவன் அவர்களுக்கு மீண்டும் கொடுத்துவிடுவார் என்பது உண்மை.

வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.