கிரகணம் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாதா ?
கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்லை, நாமும் வரக்கூடாது. வயிற்றுக்குள் இருக்கக்கூடிய சிசுவை, கிரக கதிர்வீச்சு நேரடியாக பாதிக்கும். கிரகண நேரத்தில் தாய்மார்கள் செய்வது அப்படியே குழந்தையை சென்றடையும் என்றும் சொல்வார்கள். சிலர் காதைச் சொறிவார்கள். குழந்தைக்கு காதில் ஒரு துளை இருக்கும் அல்லது காது மடங்கி இருக்கும். அது கிரகணத்தினுடைய தாக்குதல். அதெல்லாம் 200% உண்மை.
கிரகணம் எப்பொழுது ஆரம்பிக்கிறது, முடிகிறது என்பதை அறிய நம் ஊர்களில் கருங்காலி மரத்தில் செய்த உலக்கையை வாசலில் எந்தவொரு பிடிமானம் (Support) இல்லாமல் ஊன்றி வைப்போம். கிரகணம் இருக்கும்போது உலக்கை நேராக நிற்கும். கிரகணம் முடிந்துவிட்டால், தானாகவே உலக்கை சரிந்து விழுந்துவிடும்.
முந்தைய காலங்களில் வீடுகளில் தர்பைப் புல் வைத்திருப்போம். தர்பைப் புல் கடவுளுக்கும் நமக்கும் ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. சுப மற்றும் துக்க காரியமாக இருந்தாலும், தர்பையை தரையில் போட்டு, உட்கார வைப்பார்கள். ஏனென்றால் அது தொடர்பை உருவாக்குகிறது. நாம் சொல்லக்கூடிய எந்தவொரு விஷயமாக இருந்தாலும், நேரடியாக அந்த இடத்திற்கு போய் சேர்க்கிறது.
கிரகணம் ஆரம்பிக்கும் போது, உணவுப் பொருள்களிலும் தர்பையை கிள்ளிப் போடுவார்கள். ஏனென்றால், கிரகண தாக்கம் உணவுப் பொருள்களில் இருக்கக்கூடாது என்று செய்கிறார்கள். இப்போது யாரும் பின்பற்றுவதில்லை, நிறைய பேருக்கு தெரியவில்லை, "மூடநம்பிக்கை" என்று சொல்லிவிடுவோம். கிரகணம் நேரம் முன்னாடியே சாப்பிட்டு விட வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு குளிக்க வேண்டும்.
என்னால் செய்ய முடியும் என்று சொல்லவில்லை, மகரிஷி அதற்கு வழிமுறைகளை கொடுத்திருக்கிறார். நான் கடவுள் கிடையாது. நான் ஒரு கருவி மட்டுமே.
நீங்கள் பார்த்த ஜோதிடத்தில் ஏதாவது ஒரு தோல்வி வந்திருக்கிறதா? நீங்கள் சொன்னது நடக்காமல் போயிருக்கிறதா?
நடந்திருக்கிறது. அதற்கான காரணம், அவர்களுடைய ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம். சரியான ஓலையை எடுத்துக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய அம்மா, அப்பா, மனைவி, கணவன், பிறந்த வருடம், மாத குறிப்பு மட்டுமே போதுமானதாக இருக்காது. முழுமையாக நடக்காமல் போனது இல்லை. மகரிஷியை சோதிப்பது, நாடி ஜோதிடத்தை சோதிப்பது, ஜோதிடரை சோதிப்பது மாதிரி அவர்கள் வரக்கூடாது.
உங்களுடைய ஓலையை எடுத்து உறுதிப்படுத்தும்பொழுது, "உங்களுடைய தந்தை பெயர் சொல்கிறேன். அது தவறு என்றால் நீங்கள் தான் சொல்லி ஆக வேண்டும். "சரி" என்று சொல்லி, தவறான ஓலைச்சுவடியை படிக்கும் பொழுது பலன் மாறத்தானே செய்யும்.
உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு, 90% நாடி பொய்யானது கிடையாது. அது அவர்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுகிறது.
பிரச்சினை தெரிந்து வைத்திருப்பார்கள், எந்த கோவில் போகலாம் என்பது நீங்கள் சொல்ல முடியுமா? அல்லது நாடி பார்த்துத்தான் சொல்வீர்களா?
"நான் நிறைய கோவில்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் எனக்கு எதுவுமே பலனில்லை" என்று சொல்வார்கள். சிலர் ஒரு கோவிலுக்குப் போய் பலன் வந்துவிடும். கோவிலை பற்றி பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் ஒவ்வொரு கோயிலும் உள்ளுணர்ந்து, ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறேன். நான் போகாத கோவில் என்பது ரொம்ப குறைவு. மக்களுக்கு வெளியில் தெரியாத சக்தி வாய்ந்த கோவில்கள் நிறைய இருக்கின்றன.
ஒருத்தர் வழக்கை சந்திக்கிறார், எந்த நேரத்திலும் கைது பண்ணலாம். அப்பொழுது அவருக்காக நாங்கள் ராஜமாதங்கி பூஜை மற்றும் சத்ரு சம்ஹாரமும் பண்ணுகிறோம். சத்ரு சம்ஹாரம் என்றால் எதிரியை அழிப்பது இல்லை. சத்ரு சம்ஹாரம் என்பது முருகனுடைய ஹோமம். அது எளிதான பூஜை கிடையாது. ஆறு முகம் முருகனுக்கு, முதல் ஐந்து முகம், 'நமசிவாய' மந்திரத்தை பற்றித்தான் வரும். மந்திர விஷயம் தெரிந்தவர்களுக்கு புரியும். ஆறாவது முகம், ஆறாவது அத்தியாயம் என்பது எல்லா தெய்வங்களும் கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சம்பந்தப்படுத்திய மந்திரம். வஜ்ராயுதம், பிரம்மாஸ்திரம், சூலாயுதம், மகாவிஷ்ணுவனுடைய சுதர்சன சக்கரம் வரைக்கும் வரும். மிகச் சக்தி வாய்ந்த மந்திரம். அதை பண்ணியவுடன், வழக்கு கொடுத்தவர், வழக்கை திரும்ப பெற்றார்கள். நான் எடுத்த வேலையின் முடிவை அன்றைக்கே பார்க்கிறேன்.
நாடி ஜோதிடத்தில் மட்டுமே பரிகாரங்கள் ஆழமாக எடுக்க முடியும். நானும் நிறைய கருத்துகளை (Comments-ஐப்) படித்தேன். "பரிகாரத்திற்கு இவ்வளவு வாங்குகிறார்கள்" என்று. எதில் கணக்கு பண்ண வேண்டும் என்று இருக்கிறது. தவறாக எங்கேயோ கொடுத்து ஏமாந்துவிட்டு நம்மிடம் பேசுவது நியாயமற்ற செயல். தினமும் கோவிலில் அர்ச்சனை பண்ணுகிறீர்கள். பிரச்சினை சரியாகவில்லை என்றால், அர்ச்சனை காசை திருப்பி யாராவது கேட்பீர்களா ? ஒரு அர்ச்சனை பண்ணியதால் உடனே சரியாகாது.
நிறைய ஆய்வு, ஆராய்ச்சி பண்ண வேண்டும். எங்கே என்ன நடக்கிறது, எந்த நேரம் உங்களை பாதிக்கிறது, எந்தப் பரிகாரம் உங்களுக்கு அந்த நேரத்தில் சரியாக நடக்கும் என்பதை ஆராய்ச்சி பண்ண வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய ஆத்மார்த்தம் இருக்கிறது.
விதியை மாற்ற முடியாது, விதி நடந்துதான் ஆகும் என்பதை நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். பரிகாரம் துணை நிற்காது, உங்க கர்ம வினையை அனுபவித்து, எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் தீர்வு தேட வேண்டும் என்று விதி இருந்தால் அதற்கு என்ன பண்ணுவது ?
ஒரு மருத்துவரிடம் 100 ரூபாய் கட்டணம் கொடுத்துவிட்டால் வியாதி சரியாகிவிடும். அது ஒரு பரிகாரம். மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு இருக்க மாட்டார்கள், வீட்டிற்கு வரும்போதே குணமாகிவிடுவார்கள்.
பரிகாரம் விலை உயர்ந்தது என்றால், 10 ரூபாய் விற்ற தேங்காய் இன்றைக்கு 40 ரூபாய் ஆகிவிட்டது. எதில் உண்மை இருக்கிறது? சாப்பாட்டில் உண்மை இருக்கிறதா? எவ்வளவு பெரிய நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்டாலும், அதில் கலப்படம் தானே பண்ணுகிறார்கள்? நாகரிகமாக, வசதியாக உட்கார்ந்து சாப்பிட்டு வருகிறோம். உண்மையாக இருக்கிறவர்களை தூற்றத்தான் செய்கிறார்கள்.
முதலில் தெய்வத்தை நம்ப வேண்டும். எனக்குக் கடவுள் நிறைய கஷ்டத்தைக் கொடுக்கும்போது, அந்த நேரம் எனக்கு வலித்தது. ஆனால் இன்றைக்கு அதை "கந்தவேல், நீ முதலில் தெரிந்துகொள். நீ உணர்ந்தால் தான் உன்னால் தீர்வு கொடுக்க முடியும் என்று கஷ்டத்தை கொடுத்தேன்" என்று எடுத்துக் கொள்கிறேன். அரிச்சந்திரன் படாத கஷ்டமா ? நேர்மையாக இருந்த ஒரே காரணத்திற்காக நாட்டை இழந்து, மக்கள், மனைவி, குழந்தையை இழந்து, கடைசியில் மயானத்தில் போய் நின்றார்.
கடவுள் மேல் பயபக்தி வேண்டும். ஈடுபாடுடன் ஒரு விஷயத்தை செய்தால், நிச்சயமாக பரிகாரம் பலன் தரும். கடவுள் அனுகிரகம் பண்ணுவார். பெரிய சிக்கலாக இருந்தாலும் வெளியில் வரலாம். பரிகாரம் பண்ணி வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் 75% மேலாக இருக்கிறார்கள்.

ॐ